தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார், படத்தை எடிட் செய்துள்ளார் விவேக் ஹர்ஷன், இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படங்கள் குடும்ப பாங்கான திரைப்படமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் தற்போது எம்ஜிஆர் மகன் திரைப்படமும் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருனாளினி ரவி நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேதா, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ராமச்சந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
தீபாவளி தின ஸ்பெஷலாக இந்த திரைப்படத்தில் இருந்து ட்ரெய்லரை கடந்த 13ம் தேதி வெளியிட்டுள்ளார்கள்.
இதோ டிரைலர்