கடுப்பில் எழுதிய கதை தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது.! பேரரசுக்கு நடந்த தரமான சம்பவம்..

Director perarasu first hit movie chance
Director perarasu first hit movie chance

Director perarasu first hit movie chance : தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர் என்ற அடையாளத்தை பெற்றுக் கொண்டவர் இயக்குனர் பேரரசு இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தன, அதேபோல் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஊர் பெயர் கொண்ட திரைப்படங்களாக இருக்கும்.

இவரின் ஆரம்பகால வாழ்க்கை கொஞ்சம் மோசமானதாக இருந்தது எப்படியாவது சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என கனவோடு வந்தவர்களில் இயக்குனர் பேரரசு அவர்களும் ஒருவர். ஆரம்ப காலகட்டத்தில் எடுத்த உடனே இயக்குனராக யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து கொண்ட பேரரசு சினிமாவில் முதலில் மற்ற துறைகளில் பணியாற்றி வந்தார்.

thalapathy 68 storyline : தளபதி 68 கதை இணையதளத்தில் லீக்.? அட இந்த கதை விஜய்க்கு செட் ஆகுமா.?

15 வருடம் சினிமாவில் பணியாற்றிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு தான் இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் எழுதிய கதை அனைத்துமே குடும்ப பங்கான கதை தான் இயக்குனர் சேரன் எடுக்கும் திரைப்படங்களைப் போல் குடும்ப பாணியில் இருந்ததால் பல தயாரிப்பாளர்கள் கமர்சியல் கதை இருந்தால் எடுத்துக் கொண்டு வாருங்கள் என திருப்பி அனுப்பி வைத்து விட்டார்கள்.

இதனால் காண்டான பேரரசு ஒரு கமர்சியல் கதையை எழுத ஆரம்பித்தார் அந்த கதையை எழுதி முடித்த பிறகு சிறிது நாட்கள் அமைதி காத்து வந்தார் அந்த சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பேரரசுவை அழைத்து அப்பொழுது அவர்களிடம் எங்களுக்கு விஜய் வைத்து படத்தை தயாரிக்கும் வாய்ப்பு இருக்கிறது அவருக்கு ஏற்றது போல் ஒரு கதை இருக்கிறதா என கேட்டது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். அந்த சமயத்தில் பேரரசும் தான் எழுதிய கமர்சியல் கதையை கூறியுள்ளார், அது தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகவும் பிடித்து விட்டதால் அன்று மாலையை அந்த கதையை விஜயும் கேட்டுவிட்டு நன்றாக உள்ளது என கூறிவிட்டார் அதன் பிறகு தான் திருப்பாச்சி படம் தயாரானது.

சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் S 43 பட டைட்டில் வெளியானது.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பல வருடங்களாக பேரரசு எழுதி வைத்திருந்த கதை அவருக்கு கை கொடுக்கவில்லை ஆனால் கோபத்தில் கடுப்பில் எழுதிய கதை தான் அவர் வாழ்க்கையை திருப்பி போட்டது.