இயக்குனர் பா ரஞ்சித் வித்தியாசமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருபவர். முதலில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டாப் நடிகர்கள் பா. ரஞ்சித்தை பாராட்டியதோடு அவரது படங்களில் நடிக்க ஆசைப்பட்டார்.
முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினி சரியான நேரத்தில் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவரிடம் கதையையும் கேட்டார். ரஜினிக்கு உடனே பிடித்துப் போகவே அடுத்தடுத்த படங்களில் பா. ரஞ்சித் உடன் பணியாற்றினார். காலா, கபாலி ஆகிய படங்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித்.
80 90 காலகட்டங்களில் நடத்த குத்துச் சண்டையை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை அன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இப்பொழுது எடுத்து கொடுத்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக அமேசான் OTT தளத்தில் வெளியாகியது இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று அசத்தியது.
இந்த படத்தில் பசுபதி, ஆர்யா, சந்தோஷ் பிரதீப் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து உடனடியாக நட்சத்திரம் நகர்கிறது என்றால் காதல் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் பா ரஞ்சித் இந்த திரைப்படத்தில் அவரது மனைவியும் பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி உள்ளாராம் இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பா. ரஞ்சித்துடன் பணியாற்றியது மிக சிறப்பான ஒன்று கல்லூரி காலத்திற்குப் பிறகு முதல் முறையாக அவருடன் பணியாற்றி உள்ளேன் நல்ல தருணம் என கூறினார் மேலும் இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு ரொம்ப பிடித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.