தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பின் நடிகராக மாறி வெற்றி கண்டு வருபவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் அதிகரித்துள்ளது.
விஜய் அண்டனி நான், பிச்சைக்காரன், சலீம் போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழையும் அதிகம் சம்பாதித்து கொடுத்தது. தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை இவரே இயக்கி நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த முதல் படமான நான் படம் பற்றி ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனிக்கு நான் படத்தை கொடுத்தவர் ஆஸ்கார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்ப்படத்தின் கதையை எழுதிவிட்டு ஆஸ்கார் ரவி முதலில் நடிகர் தனுசுக்கு சொலல் ஏற்பாடு செய்திருந்தார். பொல்லாதவன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது இயக்குனர் இந்த கதையை தனுஷிடம் கூறி உள்ளார்.
அப்பொழுது இயக்குனர் பதட்டமாக இருந்ததால் தனுஷ் அவரை கூல் செய்து கதையை கேட்டார் ஆனாலும் பதற்றத்தில் கதையை சரியாக சொல்லாததால் இரண்டு நாட்கள் கழித்து தனுஷ் இந்த படத்தின் கதையை வேண்டாம் என இயக்குனரிடம் கூறிவிட்டார்.
நான் கதையை சரியாக கூறாததால் தனுஷ் இந்த இந்த கதையை மறுத்துவிட்டார். இந்த படத்தின் கதை சொல்லும் பொழுது அவர் என்னிடம் கதை கேட்பதை விட ஆறுதல் சொன்ன நேரமே அதிகமாக இருந்தது என வெளிப்படையாக கூறியுள்ளார்.