ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய நெல்சன் – மாஸாக வெளிவந்த ரஜினியின் “நியூ லுக்”..!

jailer-
jailer-

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த தோல்வி படமாக அமைந்தது. அதிலிருந்து மீண்டு வர பல்வேறு இளம் இயக்குனர்களுடன்  கதை கேட்டு வந்தார்.

அந்த வகையில் நெல்சன் சொன்ன கதைதான் ரஜினிக்கு ரொம்ப பிடித்து இருந்ததாம். அதனால் நெல்சன் உடன் கைகோர்த்து ரஜினி தனது 169-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டது இந்த படத்தின் சூட்டிங் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், தமன்னா, யோகி பாபு, வசந்த ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர் இந்த படத்தின் கதை குறித்தும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைக்க பிளான் போடுகிறது.

அந்த சிறையில் பணியாற்றும் அனுபவமிக்க செயலரான ரஜினிகாந்த் அந்த பிராணையை முறியடித்து சிறையை காப்பாற்றுவதே படத்தின் கதையாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது இதனால் படம் சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இன்று காலை 11 மணிக்கு முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் காலை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன காவல் நிலையம் போன்ற ஒரு செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் இருக்கும் ஜெயிலர் பட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது அதுவும் ரசிகர்களை தற்போது துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது.