மாஸ்டர் விக்ரம் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியதை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. குறிப்பாக கமலின் விக்ரம் திரைப்படம் கதைகளம் வித்தியாசமாகஇருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படமாக மாறியது.
மேலும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் லோகேஷின் திறமையை அறிந்த டாப் ஹீரோக்கள் பலரும் அவரது படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் லோகேஷ் கனகராஜ் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
தற்போது அவர் ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லோகேஷை விட இயக்குனர் நெல்சன் தற்பொழுது சம்பள விஷயத்தில் சற்று உச்சத்தில் இருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல்முறையாக கைகோர்த்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார் இது ரஜினிக்கு 169 வது திரைப்படமாகும்.
இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது இந்த படத்தில் ரஜினிக்கு நிகராக பல்வேறு டாப் ஹீரோக்கள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர் அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யாராய் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது. தலைவரின் 169 திரைப்படத்தை இயக்க நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி சம்பளமாக கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
லோகேஷ் 12 கோடி என்றால் நெல்சனின் சம்பளம் 20 கோடி வாங்குகிறார். பீஸ்ட் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு நெல்சனின் சம்பளம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து சம்பளத்தைக் குறைக்காமல் அப்படியே வைத்திருக்கிறது.