சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் நெல்சன்.!

siva karthikeyan
siva karthikeyan

தமிழ் திரை உலகில் தொகுப்பாளராகவும், காமெடி நடிகராகவும் காலடி எடுத்துவைத்து தற்போது தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பித்துக் கொண்டவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான்,டாக்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்ற அயலான் திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சிவகார்த்தியன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.