ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு செம ஸ்டைலாக அழகாக இருக்கும் இயக்குனர் நெல்சனின் மனைவி.! வாயடைத்துப் போன ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்

nelson-dilip-kumar

சின்னத்திரையின் மூலம் பிரபலம் அடைந்து தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாகவும், நடிகைகளாகவும், இயக்குனர்களாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நெல்சன் திலீப்குமார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சில நிகழ்ச்சிகளை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

மேலும் அதன் பிறகு திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்த நிலையில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தினை இயக்க நினைத்தார் ஆனால் அந்த படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. எனவே இதன் காரணமாக நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருடைய முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை பெற்று தந்தது. இவ்வாறு இதன் மூலம் பிரபலமான நெல்சன் திலீப்குமார் விஜயை வைத்து பீஸ்ட், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் போன்ற இரண்டு வெற்றி திரைப்படங்களையும் தந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஹீரோவாக நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் இதற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற இருக்கிறது மேலும் விரைவில் இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகிறார்கள்.

monisha
monisha

இப்படிப்பட்ட நிலையில் இந்த அளவிற்கு நெல்சன் பிரபலமாக இருந்து வந்தாலும் இவருடைய மனைவி, மகனை இதுவரையிலும் வெளி உலகத்திற்கு காமிக்காமல் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நெல்சன் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடினார். எனவே இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி இருந்தார்கள்.

monisha nelson

இந்நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷா தனது கணவருக்கு க்யூட்டான புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இவ்வாறு இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக மோனிஷா செம ஸ்டைலாக ஹீரோயின்களை கொடுக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்காது. இதோ நெல்சன் மனைவி புகைப்படம்..