director nelson dhilip kumar vs lodgesh kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது, சமீபகாலமாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப், வினோத் ஆகியோர்கள் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அதேபோல் நெல்சன் திலிப் குமார் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், இந்த திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. டாக்டர் திரைப்படம் அருமையாக வந்துள்ளது எனவும் படம் கண்டிப்பா ஹிட்டடிக்கும் எனவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள், அந்த வகையில் தற்பொழுது சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது, டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக முன்னணி நடிகரை வைத்து இயக்க இருக்கிறாராம்.
அது வேறு யாருமில்லை தளபதி விஜய் தான், தளபதி விஜய் இடம் தற்பொழுது நெல்சன் புதிய கதை ஒன்றைச் சொல்லி இம்ப்ரஸ் செய்துள்ளாராம், விரைவில் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கண்டிப்பாக இந்த திரைப்படம் தளபதி 65 திரைப்படமாக இருக்கும் எனவும் பல தரப்பில் இருந்து தகவல் வந்து கொண்டே இருக்கின்றன, தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் பிடித்துவிட்டால் லோகேஷ் கனகராஜ் அளவிற்கு சினிமாவில் உயர்ந்து விடுவார் என்பதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக இருக்கிறது.