மிஸ்கினுக்கு பிடித்த 6 திரைபடங்கள் இதுதான்.! அதில் தமிழ் படம் இத்தனை தான்.! விவரம் இதோ.!

mysskin
mysskin

சினிமாவில் பல இயக்குனர்கள் ஆண்டுதோறும் உருவாகி வருகிறார்கள் அதுபோல அந்தந்த இயக்குனர்களுக்கு என்ன வருமோ அதே பாணியில் தனது படத்தை எடுத்து வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தனித்துவமான பாணியின் மூலம் பல வெற்றிகளை குவித்தவர் மிஸ்கின். இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் திரை உலகில் பல பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.

இவர் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல வெற்றிப்படங்களை இதன் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இவர் கடைசியாக இயக்கிய சைக்கோ திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து அவர் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் முதல் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார் இடையில் விஷாலுக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் படத்தில் இருந்து விலகினார் மிஷ்கின்.தற்பொழுது மிஷ்கினுக்கு பிடித்த உலகத் தரமான படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது.

1. செவேன் சாமுராய் 2.எ மேன் எஸ்கேப்டு 3. தேவர்மகன் 4.தங்கப்பதக்கம் 5.சின்ட்லேர்ஸ் 6.கிளோஸ் என்கவுன்டர்ஸ் அப் தி தெர்ட் கைன்டு.