நெஞ்சு வலியுடன் அறக்க பரக்க காரில் ஏறி வந்த இயக்குனர் மிஸ்கின்!! காரணம் இதுதான்..

mishkin
mishkin

director myskkin: அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள மனதில் இடம் பிடித்தவர் மிஸ்கின் இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

இதனை அடுத்து திண்டுக்கல்லில் இருக்கும் பழமையான வி. ஜி .பி தியேட்டர் எடுக்கப்போவதாக உருக்கத்துடன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் இவர் நான் ஐந்து வயதில் எனது தந்தையுடன் அந்த தியேட்டருக்கு சென்றபோது புரூஸ் லீ நடித்த என்டர் தி டிராகன் படத்தை பார்த்தேன்.

எனது அடுத்த படத்தில் லோக்கேஷனுக்காக திண்டுக்கல் சென்ற போது அங்கே நான் படம் பார்த்த தியேட்டரில் போய் பார்த்தேன்.

அப்போது தான் தியேட்டரில் உரிமையாளர் இங்கு படம் ஓடவில்லை அதனால் தியேட்டரை இழுத்து மூடி விட்டேன் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் தியேட்டர் ஓனர் அடுத்த வாரம் தியேட்டரை எடுக்கப் போகிறோம் என்று சொன்னதால் நெஞ்சு வலியுடன் காரில் ஏரி வந்தேன் என்றும் பதிவு செய்திருந்தார்.இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.