ஒரு காலத்தில் ஓஹோன்னு இருந்த நம்ம இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா..? அட பாவத்த..!

murugados
murugados

director murugados latest update: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவருக்கு ஆஸ்தான இயக்குனர் என்றால் அது ஏ ஆர் முருகதாஸ் தான். ஏனெனில் இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணியில் இதுவரை எந்த ஒரு தோல்வி திரைப்படங்களும் உருவானது கிடையாது.

அந்தவகையில் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி கத்தி சர்க்கார் போன்ற பல்வேறு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை  பெற்றுள்ளது. ஆனால் தற்போது தளபதி விஜய் இவருடைய திரைப்படத்தில்  நடிப்பதே கிடையாது.

இந்நிலையில் தளபதி 65வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் முதலில் இயக்குவதாக இருந்தது ஆனால் அந்த வாய்ப்பும் தற்போது பறிபோய் விட்டன.  ஏனெனில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மிகவும் பில்டப் பண்ணி தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் தோல்வியடைந்தார்.

இதனால் தளபதி விஜய் அவருடைய திரைப்படத்தில் நடிக்க மறுத்தது மட்டுமல்லாமல் ஏஆர் முருகதாசுக்கு சம்பள பிரச்சனை அதிகமாக இருப்பதன் காரணமாக எப்படியாவது கோலிவுட்டில் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என அயராது போராடி வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு முன்னணி நடிகருக்கு முருகதாஸ் கதை சொல்லி வருவதாகவும் அதில் பலர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு பயப்புடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன இந்நிலையில் அல்லு அர்ஜுன்  முருகதாசின் ஒரு கதைக்கு ஓகே செய்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதன் காரணமாக இந்த திரைப்படத்தில் இப்போது நடிக்க முடியாது என அல்லு அர்ஜுன் கூறியுள்ளாராம். இதனால் ஏ ஆர் முருகதாஸ் மிக ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார்.

murugados
murugados