அஜித் சார் வீட்டு ஃபங்ஷனுக்கு வேண்டுமென்றே போகவில்லை.. மோகன் ஜி அதிரடி பேச்சு…

ajith

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் மோகன் ஜி. இந்த படத்தினை அடுத்து திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையில் பல திரைப்படங்களை எடுத்து தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மோகன் ஜி செல்வராகனை  ஹீரோவாக வைத்து பகாசூரன் என்ற திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் நட்டி, ராதாரவி, தரக்ஷி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ் லயா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இவ்வாறு இயக்குனர் மோகன் அஜித்தின் மைத்துனரும் ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்டை வைத்து இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இதன் மூலம் இவருக்கு அஜித்துடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அஜித்தின் மச்சா ரிச்சர்டை வைத்து படம் எடுத்து வந்தாலும் இவர் தீவிர தல ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அஜித் குறித்து இவர் அடிக்கடி பல பதிவுகளை வெளியிட்டு வருவார். திரௌபதி படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அஜித் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகனை பாராட்டி இருந்தார். பலரும் தன்னுடைய மச்சானின் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் அஜித் இவ்வாறு பதிவுகளை வெளியிட்டுள்ளார் என கூறி வந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட மோகன் என்னதான் நான் தீவிர அஜித் ரசிகராக இருந்தாலும் அஜித்தை சந்தித்து தன்னால் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை என்று கூறினார். மேலும் இதற்கு விளக்கம் அளித்த அவர் அஜித் சாரின் தீவிர ரசிகர் ரிச்சர்ட் உடன் திரௌபதி படத்தை முடித்துவிட்டு பின் எனக்கு அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது.

mohan g
mohan g

அவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கூட ரிச்சர்ட் என்னை அழைத்து வந்தார் ஆனால் நான் வேண்டுமென்றே அந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் செல்லாமல் விட்டுவிட்டேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் நிச்சயம் அஜித் சாரோடும் புகைப்படம் எடுக்க ஆசையாக இருக்கும் அந்தப் புகைப்படம் வெளியில் வந்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால் அதனை எல்லாம் தவிர்த்து வந்தேன்.

எனக்கு அஜித் சாரை சந்திக்க ஆசையாக இருக்கிறது ஆனால் பகாசூரன் இந்த எண்ணத்தை மாற்றும் இவன் இப்படி மட்டும் படம் எடுக்க மாட்டான் இப்படியும் எடுப்பான் என்ற ஒரு இமேஜ் எனக்கு கிடைக்கும் அப்பொழுது நான் சென்று அஜித் சாருடன் சூப்பராக ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்வேன் என கூறினார்.