Draupathi movie Director Mohan :இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமிபத்தில் வெளிவந்த திரைப்படம் திரௌபதி. இந்த ப்படத்தின் கதாநாயகனாக ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். கதாநாயகியாக டூலட் படத்தில் நடித்திருந்தால் ஷீலா நடித்திருக்கிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள் என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இவர்களுடன் கருணாஸ், இஷாந்த், சௌந்தர்யா, ஆறுபாலா, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி போன்றோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 2013ம் ஆண்டு வடசேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த போலி திருமணங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பழைய வண்ணாரப்பேட்டைக்கு பிறகு மோகனுக்கும் நடிகர் ரிச்சர்ட் ரிசிக்கும் இரண்டாவது திரைப்படமாகும். இது முற்றிலும் வட தமிழகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
#திரெளபதி படத்தில் விவசாயியாக நடித்த அரியலூரை சேர்ந்த மண்ணாங்கட்டி அண்ணன் இன்று நம்முடன் இல்லை.. இறைவனடி சேர்ந்தார்.. அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய ஈசனை வேண்டி கொள்கிறேன்.. pic.twitter.com/gQ5fgqZ4TO
— Mohan G ?❤️ (@mohandreamer) April 17, 2020
இத்திரைப்படத்தில் விவசாயியாக நடித்த அரியலூரை சேர்ந்த மண்ணாங்கட்டி அண்ணன் இறைவனடி சேர்ந்தார். அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் கடவுளை வேண்டுவோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.