இரண்டாவது முறையும் கை நழுவிச் சென்ற விஜய் பட வாய்ப்பு.! உச்சி கொட்டும் மோகன் ராஜா

vijay
vijay

Director Mohan Raja: தளபதி விஜய்க்கும் தனக்கும் உள்ள நட்பு குறித்து இயக்குனர் மோகன் ராஜா சமீப பேட்டியில் கூறியிருக்கும்  தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோகன் ராஜா விஜய் குறித்து கூறியதாவது, விஜய் சார் உடைய மகள் நான் இயக்கிய சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் மிகப்பெரிய ரசிகை இது குறித்து விஜய் சார் என்னிடம் உன்னுடைய படம் பார்த்து என்னுடைய குழந்தை சாப்பிடாமல் இருக்கிறாள் என்று சொல்லி இருக்கிறார்.

அந்த சமயத்தில் தான் அவர் உன்னுடைய தம்பிக்கு தான் படம் செய்வாயா? எனக்கு எல்லாம் செய்ய மாட்டாயா என்று கேட்டார். இதை நான் நிறைய இடத்தில் சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அது என்னுடைய வாழ்வில் நான் மறக்க முடியாத ஒரு அனுபவம் வேலாயுதம் படத்தின் கதையை நான் விஜய் சாரிடம் சொன்னபோது அவர் எழுந்து நின்று கை கொடுத்தார்..

அதன் பின்னர் அவருடன் இரண்டாவதாக இணையும் வாய்ப்பை நான் தழுவ விட்டு விட்டேன் அவர் அப்படியான ஒரு நல்ல ஹீரோ. ஒருமுறை நான் காஷ்மீர் சென்று கொண்டிருக்கும் பொழுது விஜய் சார் என்னிடம் அஜித் சார் வெங்கட் பிரபு என்னுடைய இயக்குனர் நீங்கள் அவரை பயன்படுத்துங்கள் என்று சொல்கிறார்.

அந்த மாதிரி நான் உன்னை சொல்ல வேண்டும் அந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார் எனக்கு இதை விட பெரிய மோட்டிவேஷன் என்ன வேண்டி இருக்கிறது. வேறு யாராவது சொல்வார்களா என்று கூட எனக்கு தெரியவில்லை. அதை அவர் அவ்வளவு இயல்பாக சொன்னார் வேலாயுதம் படத்தில் சொன்னா புரியாது பாடலில் முதலில் அவர் ஆடுவதாகவே இல்லை.

கடைசியாக படப்பிடிப்பு முடிந்தவுடன் பூசணிக்காய் அடித்து உடைக்கும் நேரத்தில் அவர் இல்லை இந்த இடத்தில் என்னுடைய ரசிகர்கள் இதை எதிர்பார்ப்பார்கள் என்று சொல்லி நடனமாடினார். அப்படி அவர் என்னுடைய ப்ராஜெக்டுக்காக என்ன தேவை என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து வேலை செய்து கொடுத்தார்.

தனி ஒருவன் படத்தை பார்த்துவிட்டு அவர் என்னிடம் முதலில் மூன்று நிமிடத்தில் படம் டேக்கப் ஆகிவிட்டது அதன் பின்னர் படம் லண்டே ஆகவில்லை என்று சொல்லி பேசினார். திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னர் விஜய் சாரா எனக்கு முதலில் கால் செய்து என்னப்பா ஜெயிச்சிட்டியாப்பா என்று கேட்டார் என கூறியுள்ளார்.