அடுத்த படத்தின் “டைட்டிலை” அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி.! ஹீரோ யார் தெரியுமா.?

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் புதுமுக இயக்குனர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் மோகன்ஜி முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது அதன்பிறகு இயக்குனர் மோகன் ஜி.

அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி உடன் கைகோர்த்து திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களை இயக்கினார் இந்த இரு திரைப்படங்களும்  நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படங்களாக ஆக இருந்ததால் இந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கியது.

இதன் மூலம் ரிச்சர்ட் ரிஷி மற்றும் மோகன் ஜி ஆகியோர் பெரிய அளவில் பிரபலமடைந்தனர். இப்பொழுதுகூட இயக்குனர் மோகன் ஜி ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளார் இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று மோகன் ஜி.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் சொல்லியது இன்று முத்துமலை முருகன் அருளுடன் இன்று இனிய பூஜை நடைபெற்றது. அடுத்த படத்தின் தலைப்பு “பகாசூரன்” என வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங்கும் வெகு விரைவிலேயே நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது வெகு விரைவிலேயே மோகன்ஜி யின் அடுத்த படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடிக்க வாழ்த்துக்கள் என கூறி ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இதில் கதாநாயகனாக செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடராஜனும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.