ஆட்டத்தை ஆரம்பித்த “விடாமுயற்சி” டீம்.. எப்போ தெரியுமா.? மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன் ஜி

Ajith
Ajith

Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல் என அனைவருமே அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகின்றனர் ஆனால் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டாலும் அதற்கான அடிப்படை வேலைகள் கூட நடக்காமல் இருப்பது அவருடைய ரசிகர்களை சோகத்தில் அழித்து உள்ளது..

பல தடவை அப்டேட் கேட்டு கேட்டு அவர்களை சளித்து விட்டனர் அண்மையில் கூட வெஸ்ட் இந்தியன்ஸ் – இந்தியா உடனான மூன்றாவது T20 போட்டியின்போது ரசிகர் ஒருவர் விடாமுயற்சி அப்டேட் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒரு பக்கம் அஜித் பைக் ரெய்டு போக இயக்குனர் மகிழ் திருமேனி எந்த ஒரு தகவலையும் பகிராமல் இருந்து வருகிறார் லைகா நிறுவனம் அதுக்கு மேல என்ற இடம் தெரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மோகன் ஜி ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியை வைத்து திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது மீண்டும் ரிச்சர்ட் ரிஷியை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார்.

தற்பொழுது  ஷாலினி மற்றும் ரிஜெக்ட் ரிஷி ஆகியவர்களுடன் பேசி வருவதால் இவர்களில்  யாரோ சொன்ன தகவலை மோகன் ஜி அப்டேட்டாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. உங்கள் நுழைவுக்காக காத்திருக்கிறேன் தல கேள்விப்பட்டவரை..

அடுத்த மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது உங்களை திரையில் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என ஒரு ரசிகனாக மோகன்ஜி பதிவிட்டுள்ளார் இதை ரசிகர்கள் பெரிய அளவில் பரப்பி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.