அஜித்தை சந்தித்த இயக்குனர் மகிழ் திருமேனி.! வைரலாகும் டுவிட்டர் பதிவு புகைப்படம்..

ak-62
ak-62

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் திரைப்படம் தான் துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இந்த படத்தினை ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவானது. இதனை அடுத்து தற்பொழுது ஆஜித் தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் இவர்களுடைய கூட்டணி இணையவில்லை.

அதாவது விக்னேஷ் சிவன் எழுதிய கதை அந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் இதனை லைக்கா நிறுவனம் வாங்க மறுத்ததாகவும் கூறிய நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மகிழ் திருமேனியை அஜித் ஒப்பந்தம் செய்தார். இந்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியை சந்தித்துள்ளார்.

அவப்பொழுது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி தேங்க்யூ அஜித் சார் உங்களோடு வொர்க் பண்ணுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என கூறி உள்ளார்.

இவ்வாறு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்த ஏகே 62 அப்டேட் வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் மேலும் யார்? யார்? இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகும் எனவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.