திரையுலகில் நடிகர், நடிகைகள், காமெடியன்களுக்கு தனி மவுசு எப்பொழுதும் உயர்ந்து இருக்கும் ஆனால் அதை சமீபகாலமாக உடைத்து வருகின்றனர் இயக்குனர்கள் காரணம் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் சிறந்த படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களுகாகவும் படத்தை பார்க்க தொடங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளை எடுத்து வரும் மிஷ்கின் என்று ஒரு மிகப் பெரிய பட்டாளமே இருக்கிறது இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ள அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற அனைத்து படங்களிலுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான் மேலும் அந்த படங்கள் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளியாக உள்ளது இந்த நிலையில் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து மிஷ்கின் அவர்கள் கூறியுள்ளார் அவர் கூறியது.
நான் முதலில் இயக்குனர் கதிரிடம் தான் பணியாற்றினேன் அப்பொழுது அவர் காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை எடுத்து வந்தார் அப்போது என் மனதில் தோன்றியது இது தனக்கான இடமில்லை என்று அதன் பிறகு உடனடியாக வின்சென்ட் செல்வாவின் துணை இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அந்த இயக்குனர் விஜய் வைத்து யூத் என்ற திரைப்படத்தை எடுத்து வந்தார். அப்பொழுது ஒரு தடவை விஜய் என்னிடம் வந்து உன்னை நான் பல நாட்களாக பார்த்து வருகிறேன் தீயா வேலை செய்றீங்க ஆனால் ஏன் இன்னும் கிட்ட வந்து பேச மாட்டேங்கிறீங்க என கேட்டார்.
அதற்கு பின் நான் ஒரு புது துணை இயக்குனர் என்றும் பணியில் அதிக நேரம் கவனம் செலுத்துவதால் தங்களிடம் பேச முடியவில்லை என்றும் அவரிடம் அப்பொழுது குறிப்பிட்டுள்ளார் இதை கேட்ட விஜய்க்கு ஷாக் ஆகி விட்டது. அந்த அளவிற்கு தனது பணியில் தீவிரமாக இருந்துள்ளார் மிஷ்கின்.