Director Manirathnam said Iswarya Dhanush called me for thisதமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவர் முதலில் பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் மலையாளத்தில் உணரு படத்தை இயக்கியிருந்தார் இவர் 1985ஆம் ஆண்டு இதய கோயில் என்ற படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.
இதன் பின் அவர் பகல் நிலவு, கீதாஞ்சலி, அஞ்சலி போன்ற சிறந்த கதை களம் உள்ள படத்தை இயக்கி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இது போன்ற படங்கள் தன்னை பிரபல படுத்தினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க அவர் சிறந்த கதைகளம் உள்ள படத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் தான் அவர் மௌனராகம், நாயகன், தளபதி, அலைபாயுதே, இராவணன், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்தவானம் போன்ற சிறந்த கதை களம் கொண்ட படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.பிரபல நடிகையான சுகாசினியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் தன்னுடைய மனைவி சுகாசினியின் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என கேட்டதற்கு பதிலளித்த மணிரத்தினம் அவர்கள் தன்னை நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் அழைத்தார் ஆனால் நான் தான் ஒப்புக்கொள்ளவில்லை.
ஏனென்றால் எனது நடிப்பைப் பார்த்து செட்டில் உங்கள் நடிப்பு லட்சணத்தை தான் நாங்க பார்த்தோமே என நடிகர்கள் கூறி விடக்கூடாது என்பதற்காக நடிக்கவில்லை என பதிலளித்தார்.