இயக்குனர் மணிரத்தினம் அவருடைய திரை பயணத்தில் உண்மை மற்றும் வரலாற்று சம்பந்தமான கதைகளை படமாக எடுத்து வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.
முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பொன்னின் செல்வன் கதையாக படித்தவர்கள் அனைவரும் படமாக பார்க்க அதிக ஆர்வம் காட்டினர். எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளி குவிக்க ஆரம்பித்தது.
தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வசூல் வேட்டைநடத்தியதால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலக அளவில் 500 கோடி மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இத்தனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னின் செல்வன் முதல் பாகம் கடந்த எட்டாம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது. முதல் முறையாக தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் ஒளிபரப்பியதால் இதை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளிவந்தது.
அதன்படி 16.38 டிஆர்பி ரேட்டிங் பொன்னியின் செல்வன் பெற்றது ஆனால் அதைவிட அஜித்தின் விசுவாசம் திரைப்படம் 18.40 TRP ரேட்டிங் பெற்று முன்னிலையில் இருக்கிறது. கேள்விப்பட்ட பலரும் விசுவாசம் படத்தின் சாதனையை முறையிடுக்க பொன்னியின் செல்வன் படம் தவறிவிட்டது என கூறி கமெண்ட் அடித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் எப்பொழுதுமே அஜித் தான் மாஸ் என கூறி வைரலாக்கி வருகிறனர்.