ரஜினி, கமலுக்கு ஸ்கெட்ச் போடும் இயக்குனர் மணிரத்தினம் – பின்னால் ஒளிந்து இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா.?

mani-ratinam
mani-ratinam

இயக்குனர் மணிரத்தினம் எப்பொழுதும் உண்மை மற்றும் நாவல் கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்குவதில் ரொம்ப கெட்டிக்காரர் இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகவே இருக்கின்றன.

இப்பொழுது கூட இவர் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் பொன்னியின் செல்வன். நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார் இது இரண்டு பாகங்களாக எடுக்கப்படுகிறது முதல் பாகம் தற்போது உருவாகியுள்ளது படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில்  ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய்,  திரிஷா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர். தற்பொழுது படத்தின் போஸ்ட் பிரமோஷன் வேலைகள் மிக தீவிரமாக போய்க்கொண்டிருக்கின்றன.

அதேசமயம் இந்த படத்தில் இருந்து பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி கொண்டுதான் இருக்கிறது இது இப்படி இருக்க மணிரத்தினம் சைலண்டாக ஒரு வேலை பார்த்து வருகிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல் இருவருக்கும்  சிறப்பான படத்தை கொடுத்துள்ளவர் மணிரத்தினம்.

தற்பொழுது இவர் உருவாக்கிய பொன்னியின் செல்வன் படத்தின்  ஆடியோ லான்ச் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சை பெரிய கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளார் இந்த நிகழ்ச்சிக்கு கமல் மற்றும் ரஜினி வர வேண்டுமென பெரிய ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்து வருகிறாராம் இவர்கள் இருவரும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டேன் எனவும் கூறிய பிடிவாதமாக இருக்கிறாராம் மணிரத்தினம். இந்த படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் எடுத்து இருக்கிறது இந்த படத்தை பெரிய அளவில் பரப்ப ரஜினி, கமல் வந்தாலே போதும் ஆட்டோமேட்டிக்காக பெரிய அளவில்  படம் ரீச் ஆகிவிடும் என கணக்கு போட்டு தான் வேலை பார்க்கிறாராம்.