Lokesh kanagaraj : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை எடுத்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இன்னும் சில தினங்களில் இருப்பதால் லியோ டீம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட ஆரம்பித்தது. மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்ததால் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டு இருந்தது ஆனால் எதிர்பாராத விதமாக கேன்சல் செய்யப்பட்டது இதற்கு பின்னால் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் லியோ படத்தின் போது லோகேஷ்க்கும், விஜய்க்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் லோகேஷ் அதிகம் தீவிரம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இப்படி சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் லியோ டீம் இருக்க.. படத்தில் நடித்த மன்சூர் அலிகான் அடுத்ததாக அவரே தயாரித்து நடித்துள்ள படம் சரக்கு.
அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியதை தொடர்ந்து சரக்கு படத்தில் இடம் பெற்றுள்ள ஆயி மகமாயி என்ற பாடலை பிரமோஷன் செய்யும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜை அணுகி உள்ளார் அப்பொழுது சால்வை அணிவித்து பின் பாடலை வெளியிட்டனர். அது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் லியோ படத்தின் பிரச்சனையால் லோகேஷ் முகத்தில் சிரிப்பே இல்லை. இதைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே அவரே கடுப்பில் இருக்கிறார் நேரம் தெரியாமல் மன்சூர் அலிகான் வேற இப்படி பண்றாரு எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.