மருதநாயகம் படத்திலிருந்து காட்சியை சுட்ட இயக்குனர் லோகேஷ்.? விக்ரம் படத்தில் அதுதான் ஹைலைட்.!

vikram-movie

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் இப்பொழுது கமலை வைத்து விக்ரம் என்னும் ஆக்சன் திரைப்படத்தையும் கொடுத்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு போதைப்பொருள் கும்பலை எப்படி அழிக்கிறார் தனது பேரப் பிள்ளையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் முழு கதை.

இதுவரை பார்த்திராத அளவுக்கு கதைகளும் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.

இதுவரை இந்த திரைப்படம் 230 கோடி வசூலில் புதிய சாதனை படைத்து உள்ளது வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் படக்குழுவினருக்கும் நடிகர்களுக்கும் பரிசு பொருளை வாரி வாரி வழங்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜூக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை கொடுத்தார் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் வாங்கி அசத்தினார் rolex கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாச் ஒன்றையும் கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் ஏன் கடைசி பீரங்கி பயன்படுத்தப்பட்டது.

குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியது கமலஹாசன் இயக்கி நடித்து வந்த மருதநாயகம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றது அதைப் பார்த்துதான் விழுந்ததாகவும் அதனால் விக்ரம் படத்தில் பீரங்கி காட்சியை வைத்ததாக லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.