இப்ப என்னுடைய சம்பளம் அதிகம்.? ஆரம்பத்தில் வாங்கிய சம்பளம் ரொம்ப ரொம்ப கம்மி – ஓப்பனாக சொன்ன இயக்குனர் லோகேஷ்.!

lokesh
lokesh

சினிமா உலகில் ஒரு படம் வெற்றி பெற நடிகர் நடிகைகளை தவிர்த்து அந்த படத்தின் கதையும் சிறப்பாக அமைந்தால் மட்டுமே திரைப்படம் ஹிட்டாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல சிறந்த இயக்குனர்கள் உள்ளனர் அவர்கள் எல்லாம் பல படங்களை இயக்கி அதில் சில வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது சிறந்த இயக்குனராக பயணித்து வருகின்றனர்.

ஆனால் இந்த காலகட்டத்தில் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் படத்தை எடுக்கலாம் என்பதுபோல் முதலில் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக மாநகரம் என்ற படத்தை எடுத்து அறிமுகமானார். அவர் எடுத்த முதல் படமே அமோக வரவேற்பை பெற்று வந்ததை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் பல நடிகர் நடிகைகளும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் நடிக்க ஆசைப் படுகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இளம் இயக்குனராக மாநகரம் படத்தை எடுக்கத் தொடங்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார். பின்பு லோகேஷ் தனது இரண்டாவது படத்தை டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தியை வைத்து எடுத்த கைதி படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து அடுத்த அடுத்த சில படங்களை இயக்கவும் ரெடியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் இயக்குனராக முதன்முதலில் வாங்கிய சம்பளம் குறித்து பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் முதலில் வங்கியில் பணியாற்றிய போது வங்கி நண்பர்களை வைத்து தான் குறும்படங்கள் எடுத்து வந்தாராம்.

அப்போது அவருக்கு துணையாக இருந்த அவரது வங்கி வைஸ் பிரெசென்ட் 3000 ரூபாய் கொடுத்து நாளைக்கு நீ எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் முதல் சம்பளம் நான் கொடுத்ததாக இருக்கட்டும் என கூறியிருந்தார். இதனால் எனது முதல் சம்பளம் 3000 ரூபாய் எனது வங்கி வைஸ் பிரெசென்ட் கணேசன் கொடுத்தார் என லோகேஷ் கூறியுள்ளாராம்.