நடிகர் விஷாலை சந்தித்த இயக்குனர் லோகேஷ்.? புகைப்படத்தால் குழம்பி போயிருக்கும் ரசிகர்கள்..!

lokesh
lokesh

அண்மைக்காலமாக தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்துகின்றனர். அந்த வகையில் நெல்சன் தீலிப்குமார், அட்லீ, ஹச். வினோத் ஆகியவர்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நல்ல படங்களை கொடுத்து வருகிறார் இவர் இதுவரை மாநகரம், மாஸ்டர் மற்றும் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம்..

என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது மேலும் தமிழை தாண்டி பிறமொழிகளிலும் நன்றாக ஓடி வசூல் வேட்டை நடத்தியது ஒட்டுமொத்தமாக விக்ரம் திரைப்படம் 410 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் உடன் கைகோர்க்க இருக்கிறார்.

தற்பொழுது விஜய் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில்  விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது வாரிசு படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தான் லோகேஷ் உடன் இணையாய் இருக்கிறார் இவர் இணைவதற்கு முன்பாக படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தட்டி தூக்கி வருகிறார் லோகேஷ்.

அந்த வகையில் சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரித்திவிராஜ் நிவின் பாலி  போன்றவர்கள் பெயர்கள் தொடர்ந்து அடிப்படுகின்றன ஆனால் யார் உறுதியாக நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை அதேபோல இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயின்னாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஷாலின் மேனேஜரை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசுகிறார் இதனால் தளபதி 67 படத்தில் விஷால் நடிக்க வாய்ப்பு இருக்கும் என கூறி ரசிகர்கள் வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் கடைசியில் லோகேஷ் எடுக்கும் முடிவு இறுதியாக இருக்கும்..

lokesh
lokesh