Leo Movie Update: லியோ படத்தின் ஃப்ளாஷ் பேக் இதுதான் என்று மன்சூர் அலிகான் கூறிய நிலையில் இதனைத் தொடர்ந்து அந்த ஃப்ளாஷ்பேக் போர்ஷன் பேக்கப் ஆக இயக்க வாய்ப்பு இருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதாவது லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் தொடர்ந்து லியோ படத்தின் பஞ்சாயத்து முடியாமல் இருந்து வருகிறது.
இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் லியோவை தொடர்ந்து தலைவர் 171வது படத்தின் வேலையை பார்க்க தொடங்கியுள்ளார். மேலும் இன்று லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற இருக்கிறது. லியோ படம் வெளியாகி 12 நாட்களை கடந்து தற்பொழுது வரையிலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.
எனவே இதனை வைத்து ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு அந்தணன் உள்ளிட்ட பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படி லோகி பொய் சொல்ல மாட்டாருப்பா என்று கூறுவதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக டெலிட் செய்த அந்த சீனை தற்பொழுது வெளியிட்டுள்ளார். கார்த்தி நடித்திருந்த லியோ படத்தில் மன்சூர் அலிகானை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் கணக்கு போட்டார்.
Since you asked for it 😉 Here you go!
Perspective scene footage perfect ah irukaa? 🔥 #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @PharsFilm @ahimsafilms @GTelefilms @SitharaEnts… pic.twitter.com/rKm2i6jqcK
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023
ஆனால் அது நடைபெறாத காரணத்தினால் லியோ படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து இருந்தார். ஆண்டனி தாஸ் யாரு, ஹெரால்டு தாஸ் யாரு என்றும் எலிசா யாரு என அனைத்தையும் ரசிகர்களுக்கு சொல்லும் விதமாக இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.
லோகேஷ் அண்ணா இப்படி மாட்டிகிட்டிங்களே.? ஆதாரத்தை வெளியிட்டு பங்கம் செய்யும் ரசிகர்கள்.
பிளாஷ்பேக் காட்சியில் மன்சூர் அலிகான் பேசிய சில காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில் இதனை வைத்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். எனவே தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த காட்சியை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் நிலையில் தற்போது ரசிகர்கள் லியோ 2-வை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.