தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களால் தேடப்படும் வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்து பின்னர் கைதி என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவே துவண்டு கிடந்த நேரத்தில் தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்கள் தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அப்போதுதான் நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்றால் அது விக்ரம் தான் அந்த அளவிற்கு யாராலும் எட்ட முடியாத ஒரு வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருடைய அடுத்த படம் தளபதி 67.
ஏற்கனவே நடிகர் விஜய் வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார் அதன் பிறகு தற்போது மறுபடியும் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்திற்காக பூஜையும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து படப்பிடிப்பதற்கு தேவையான அனைத்து வேலைகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வரும் என்று கூறியுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
கடந்தாண்டு வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது வாரிசு வெளியாகியிருக்கிறது இந்த படமும் நடிகர் விஜய்க்கு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு வாரிசு மற்றும் பீஸ்டை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.