இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக பிரபல முன்னணி நடிகரை களம் இறக்கி உள்ளதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியதன் பிறகு தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்தாண்டு கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையே தூக்கி நிறுத்தியது அந்த அளவிற்கு விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றது.
விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடிக்கடி பேட்டிகளில் கூறி வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு படம் வெளியான உடனே தளபதி 67 திரைப்படத்தில் உள்ள அப்டேட் வெளியாகும் என கூறியிருந்தார்.
அந்த வகையில் தளபதி 67 திரைப்படம் குறித்து அடிக்கடி சில அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியாகவில்லை. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்காக பிரபல முன்னணி நடிகரை தட்டி தூக்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதாவது விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் விக்ரம் அவர்கள் தான் நடிக்க இருந்தார் ஆனால் ஒரு சில கால் சீட் பிரச்சனைகளால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது ஆனால் மறுபடியும் அவரால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விக்ரம் படத்தின் இரண்டாவது பாகத்தில் விக்ரம் அவர்கள் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் ஒரு வில்லனாக தான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்திற்காகவும் விக்ரம் 2 திரைப்படத்திற்காகவும் காத்திருக்கிறார்கள்.
மேலும் தளபதி 67 திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக கைதி 2 படத்தை எடுக்க தயாராக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கேங்ஸ்டார் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதுவும் நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67-ல் நடிகர் விஜய் அவர்கள் ஒரு வயதான வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தளபதி 67-இல் நடிகர் கமல் அவர்கள் ஒரு கேமியோ ரோலில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது விரைவில் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் மிகத் தீவிரமாக காத்திருக்கிறார்கள்.