விஜய் ரசிகர்களைப் பார்த்தாலே மிரளும் இயக்குனர் லோகேஷ்..! தளபதி 67 படத்தின் நிலைமை இதுதான்..!

lokesh-
lokesh-

தமிழ் சினிமா உலகில் பல சிறந்த வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று வருகின்றனர். அதற்கு மாறாக தற்போது திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னணி இயக்குனராகளாம் என்ற எண்ணத்தில் இளம் இயக்குனர்கள் பலரும் ரசிகர்களை கவரம்படியான படங்களை கொடுத்து சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழில் மாநகரம் என்னும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் கைகோர்த்து விஜய்யுடன் மாஸ்டர் கமலுடன் விக்ரம் போன்ற ஆக்சன் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ்.

அதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போன இயக்குனராக மாறி உள்ளார். விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் 67வது திரைப்படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படம் குறித்து சில தகவல்களும் அவ்வபோது இணையதள பக்கத்தில் சொல்லப்பட்டது.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளார். என பல தகவல்கள் வெளிவந்த நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் தனியார் சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேர்த்தனர். மேடையில் லோகேஷ் பேச ஆரம்பித்ததும் எடுத்த உடனே அவரே வான்டடாக தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்..

அந்த அப்டேட்டை வெளியிடுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கு என்பது போல் அவரே கூறியுள்ளார். அதை தவிர்த்து வேறு எந்த கேள்வியாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் என லோகேஷ் கூறியதை எடுத்து சில கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரும் ஓப்பனாக பதில் அளித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.