தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டிப் பறந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி. இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
கொரோனா பிரச்சனையினால் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வந்தார்கள் எனவே திரைப்படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. பிறகு கொரோனா கொஞ்சம் சரியானதால் 50% பேருக்கு மட்டுமே தியேட்டரில் படம் பார்க்க அனுமதி தரப்பட்டது.
அந்த வகையில் பல மாதங்களுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இதனால் ரசிகர்கள் மற்றும் பல தொழிலாளர்கள் கை கால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
இப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாகி சில தினங்கள் கழித்து OTT-யில் ரிலீசானது இந்த இரண்டிலும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. அந்த வகையில் ஜனவரி 13-ம் தேதி அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 16 நாட்கள் கழித்து அமேசான் பிரைம் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த இரண்டிலும் இதுவரையிலும் ரூபாய் 250 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தியேட்டரில் ரிலீஸ்சாகி இன்று வரையிலும் 50 நாட்கள் முடிந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள், படக்குழுவினர்கள் என்று அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனராஜி இப்படத்தை வெற்றி பெற வைத்த ஹீரோ மற்றும் வில்லனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார். ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் unseen வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na 🤜🏻🤛🏻 pic.twitter.com/1qAPXRj3IM
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 3, 2021