director lingusamy latest movie villan: தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்தவர்தான் நடிகர் அருண்விஜய் இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக பட வாய்ப்புகளை பெற்ற அருண் விஜய் தற்போது ஹீரோவாக மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கிவிட்டார் அந்த வகையில் தற்போது அவருடைய நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக அருண் விஜய் வில்லனாக நடிக்கும் போது எடுக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் மட்டுமல்லாமல் அதிக அளவு பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகவே அமைந்தது.
இதன் காரணமாக அருண் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மாபெரும் ஹிட் கொடுத்து வந்தன அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரம் இருந்தாலும் பரவாயில்லை என வில்லன் ஹீரோ என தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வந்த நமது நடிகர் தற்போது ஹீரோ ரோலில் மட்டுமே திரைப்படம் நடித்து வருகிறார்.
இவ்வாறு ஹீரோவாக நடிக்க முடிவு எடுத்த பிறகு பிரபல இயக்குனர் ஒருவர் அருண் விஜய்யிடம் வில்லனாக எனக்கு ஒரு திரைப்படம் நடித்து கொடுங்கள் என கேட்டு வருகிறாராம் அவர் வேறு யாரும் கிடையாது பிரபல இயக்குனர் லிங்குசாமி. இவர் ஆரம்பத்தில் பல மெகா ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் தற்போது ஒரு ஹிட் திரைப்படம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ராம்போத்தேனி என்பவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்தால் இந்த திரைப்படத்தில் மார்க்கெட் எகிறி விடும் என கூறியுள்ளாராம் ஆனால் அருண் விஜய் இதற்கு மௌனம் காத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.