கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் அறிமுக இயக்குனருக்கான சைமா விருதிணை பெற்றார். அதுமட்டுமல்லாமல நல்ல திரைக்கதைக்கான விகடன் குழுமத்தின் விகடன் அவார்ட்ஸ் என்னும் விருதையும் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விஜய் அவார்ட்ஸ்யும் பெற்றார். மேலும் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், திரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன் என அனைவரும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
பேட்ட படத்தில் ரஜினி பாய்ஸ் ஹாஸ்டல் வார்டனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது பெயர் காளி மற்றும் பேட்டை வேலன். இந்த படத்தில் ஒரு காட்சியில் ஹாஸ்டல் வார்டனாக வேலையில் சேரும்போது ஒரு பெண்ணை காட்டியிருப்பார்கள். அவர் வேறு யாரும் இல்லை கார்த்திக் சுப்புராஜ்ஜின் மனைவி. தற்போது கார்த்திக் சுப்புராஜ் மனைவி நடித்திருந்த அந்த ஒரு காட்சி இணையதளத்தில் புகைப்படமாக வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.