திரை உலகிற்கு வெற்றியை மட்டுமே கொடுக்கக்கூடிய இயக்குனர்கள் பெரிதும் பணத்திற்கு ஆசைப்படாமல் உடனேயே படத்தை எடுக்காமல் நல்ல கதைக்களத்தை எடுத்து அதில் யார் நடிக்க வேண்டும் யார் நடித்தால் அந்த படம் ஹிட் ஆகும் என்பது வரை அனைத்தையும் புரிந்து வைத்து ஒரு நடிகருக்கு ஹிட் படம் கொடுப்பார் அப்படி திரை உலகில் வெற்றியை மட்டுமே கொடுத்தவர் கேவி ஆனந்த்.
இவர் இயக்கத்தில் அயன், கோ, கவண் மற்றும் கடைசியாக சூர்யாவை வைத்து காப்பான் என்ற திரைப்படத்தையும் எடுத்திருந்தார் இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல கருத்துகளை எடுத்துரைத்ததோடு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு டாப் நடிகரை வைத்து படம் எடுக்க ரெடியாக இருந்தால் இந்த நிலையில் கேவி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார் இச்செய்தி இப்பொழுது திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீடியா உலகில் எடுத்த உடனேயே இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பாக கே வி ஆனந்த் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து திரைஉலகம் பக்கம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது இவரும் இயக்குனர் ஆவதற்கு முன்பாக வெள்ளித்திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
கே வி ஆனந்த் எப்பொழுதும் கமர்ஷியல் படங்களில் ஒரு நல்ல கருத்துக்களை சொல்லக்கூடியவர் அப்படித்தானே இதுவரையிலும் இவர் இயக்கிய திரைப்படங்கள் இருந்து வந்தன. கடைசியாக இவர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க இருந்தார் இந்த படம் குறித்து அவருடன் பகிர்ந்து கொண்டிருந்த கேவி ஆனந்த் விரைவில் இவர்கள் படம் பண்ண இருந்த நிலையில் தற்போது அவர் மாரடைப்பால் இறந்த செய்தியை தற்போது அந்த நடிக்கரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் வேறு யாருமல்ல நடிகர் சிம்புதான் இவரை வைத்துதான் புதிதாக ஒரு திரைப்படத்தை எடுக்க இறந்தார். கே வி ஆனந்த் இறப்பு செய்தியை கேட்டு சிம்பு தனது இரங்கலை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். சினிமாவுலகில் கே வி ஆனந்த் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட கால ஆசை அப்படித்தான் கோ படத்தில் ஜீவாவிற்கு பதிலாக முதன்முதலில் சிம்புவிடம் தான் வந்தது அப்போது அவரால் நடிக்க முடியவில்லை.
ஆனால் படம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த பிறகு சிம்பு ரொம்ப வருத்தப்பட்டார். அதன் பிறகாவது எப்படியாவது கேவி ஆனந்த் படத்தில் வேண்டும் கனவு கண்ட சிம்புவிற்கு ஏமாற்றமே நிறைந்து உள்ளது ஏனென்றால் கே வி ஆனந்த தற்போது மரணம் அடைந்தது அவருக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளதால் இதுவரையிலும் அவருடன் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.