வித்தியாசமான கெட்டப்பில் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்!! அட லாஸ்லியா,தர்ஷன் கூட. வைரலாகும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

k.s.ravikumar
k.s.ravikumar

பொதுவாகவே இயக்குனர்கள் எந்த மொழியிலாவது ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தால் அந்தப் படத்தை ரீமேக் செய்து இயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்தவகையில் தமிழில் முன்னணி இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் மலையாளத்தில் வெளிவந்த மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இப்படத்தின் முழு உரிமத்தையும் வாங்கி அதனை ரீமேக் செய்து தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

இந்த திரைப்படம் எதார்த்தமான திரைக்கதையில் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மலையாளத்தை விட தமிழில் சில காமெடிகளை புகுத்தி எடுத்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் அளவிற்கு சுவாரஸ்யத்துடன் எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோபாலா சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Losliya-Tharshan-Google-Kuttapan
Losliya-Tharshan-Google-Kuttapan

அந்த புகைப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார் வயதான கெட்டப்பில் உள்ளார். மேலும் அந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, பிக்பாஸ் பிரபலமான தர்ஷன், போன்ற பலர் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடிகை லாஸ்லியாவும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

ks-ravikumar-googlekuttappan-getup
ks-ravikumar-googlekuttappan-getup