பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்

Hari

Director Hari : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் ஹரி. இவர் முதலில் சிம்ரன் பிரசாந்தை வைத்து “தமிழ்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார்.  ஆனால் அந்த படம் பெரிய வெற்றியை ருசிக்கவில்லை.. உடனே விக்ரம், திரிஷாவை வைத்து சாமி படத்தை எடுத்தார். ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதன் பிறகு இயக்குனர் ஹரி மார்க்கெட் உயர்ந்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுக்கு கதை சொல்லி வெற்றிகளை அள்ளினார். அந்த வகையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கோவில், அருள், தாமிரபரணி, வேல், வேங்கை, ஆறு போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

நீச்சல் உடையில் உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்.. ரசிகர்களை தொந்தரவு செய்த நடிகை துஷாரா விஜயன்

சூர்யாவுடன் சிங்கம் பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக அருண் விஜயை வைத்து யானை படத்தை எடுத்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இதிலிருந்து மீண்டு வர இயக்குனர் ஹரி விஷால் உடன் கூட்டணி அமைத்து ஒரு படம் பண்ணி வருகிறார்.

இதில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றன இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் வயது 88. இவர் உடல்நல குறைவு காரணமாக இயற்கை எழுதி உள்ளார்.

குணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் டிஆர்பி – யின் நிலைமையை பார்த்தீர்களா.! டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ..

Hari
Hari

தனியார் மருத்துவமனையில் இருந்து இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்திற்கு எடுத்து சென்று அஞ்சலிக்கு வைத்துள்ளனர். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர் வர முடியாதவர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.