தமிழ் சினிமா உலகில் ஆக்சன் படங்களை எடுப்பதில் மிக கைதேர்ந்த ஒரு இயக்குனராக இருப்பவர் ஹரி இவர் இதுவரை தமிழில் சிங்கம் சாமி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து அசதி உள்ளவர் இவர் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி உள்ள திரைப்படம் யானை.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்பொழுது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது யானை படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா, சரத்குமார் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது. இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் தற்பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் நிச்சயம்.
மிக பிரம்மாண்ட ஒரு வசுலை அள்ளி புதிய சாதனை படைக்கும் என நம்பி உள்ளது. தற்போது படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஹரி சமீபத்தில் பல்வேறு விதமான பேட்டிகள் கொடுத்து வருகிறார் அதில் யானை படம் குறித்தும்..
அவரது பழைய படங்கள் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார் அப்படி தான் சாமி படத்தில் நடந்த சில தகவல்களை நமக்கு வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து பார்ப்போம். சாமி படத்தில் விக்ரமின் முதல் காட்சியை நினைத்து தன் ரொம்ப வருத்தப்படுவதாக தெரிவித்தார்.
அந்த படத்தில் அறிமுக சீன் எடுக்கும் பொழுது முற்றிலும் அவர் லோக்கலாக இருக்க வேண்டும் என எண்ணி இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் காட்சியை எடுத்தேன் ஆனால் அதை எண்ணி இப்பொழுது வருத்தப்படுகிறேன் ஏனெனில் மதுவுக்கும் போதைக்கும் எதிரானவன் என்று வருத்தத்துடன் பேசி உள்ளார் ஹரி.