தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக வலம் வரும் ஹரி. விக்ரம், சூர்யா ஆகியோர் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து தற்போது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். இயக்குனர் ஹரி ஒரு திரைப்படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைப்பார்.
அந்த வகையில் சூர்யாவின் சிங்கம் சீரிஸ், விக்ரமின் சாமி சீரிஸ் போன்ற சூப்பர் டுப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது அருண் விஜய்யுடன் AV 33 திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் கிராமத்து சாயலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அருண் விஜய் படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து ஏற்பட்டது அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இது ஒரு பக்கம் இருக்க அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் பல ஜாம்பவான்களை ஒவ்வொருவராக இழுத்து போட்டு வருகிறார் இயக்குனர் ஹரி. அந்த வகையில் 8 வருடங்களுக்கு முன்பு நடித்த கங்கை அமரன் மீண்டும் இத்திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு கலந்து கொண்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.