தமிழ் சினிமாவில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை காட்டி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து விட்டு பின்பு ஹீரோவாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சரத்குமார்.
இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. இவர் தொடர்ந்து சினிமாவின் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். பொதுவாக வில்லனாக பார்த்த நடிகர்களை ஹீரோவாக பார்ப்பது மிகவும் கடினம் இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் சரத்குமாரை ஏற்றுக் கொண்டார்கள்.
இதன் மூலம் இவருக்கு k.s.ரவிகுமாரின் ஆதரவு பெருமளவில் கிடைத்தது. சினிமாவில் வெற்றியை மட்டுமே சந்தித்து வந்த சரத்குமாருக்கு திடீரென்று குரலில் பிரச்சினை ஏற்பட்டது.
எனவே குரல் பிரச்சனையினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். எனவே அறுவை சிகிச்சைக்கு பிறகு இவர் கிட்டத்தட்ட 15 படங்களில் கமிட்டாகி இருந்ததால் பணம் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்று அனைவரும் கொடுத்த அட்வான்சை வாங்க வீட்டிற்கே நேரடியாக வந்து விட்டார்கள்.
அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமாரும் சரத்குமாரை சந்தித்துள்ளார். அதற்கு சந்தித்த சரத்குமார் நீங்களும் அட்வான்ஸ் திரும்பி வாங்குவதற்கு வந்து இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு கேஎஸ் ரவிக்குமார் நான் அட்வான்ஸ் வாங்குவதற்காக வரவில்லை என் முதல் படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அதேபோல் ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்கினாராம்.
சரத்குமார் ரவிக்குமாரிடம் எனக்கு குரல் சரியாவதற்கு ஆறு மாத காலம் ஆகும் என கூறியும் கே எஸ் ரவிக்குமார் பரவாயில்லை எத்தனை மாதம் ஆனாலும் நீங்கள் தான் என் முதல் படமான புரியாத புதிர் படத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார். இந்த விஷயத்தை சரத்குமார் ஒரு பேட்டியில் கூறி விட்டு கண் கலங்கினார்.