இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் வடிவேலுவை நாடா காரணம் என்ன தெரியுமா.? கதைகளம் தானாம்.

vadivelu-and-goutham
vadivelu-and-goutham

நடிகர் வடிவேலு என்பது தொன்னூறு காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் நடித்து மக்களுக்கு விருந்து படைத்து வருகிறார். காமெடியனாக ஒருபக்கம் வெற்றிகளை கண்டுவர மறுபக்கம் ஹீரோவாகவும் இவர் பல்வேறு வெற்றிகளை பெற்று அசத்தி உள்ளார்.

அந்தவகையில் இருபத்தி மூன்றாம் புலிகேசி, தெனாலி ராமன் ஆகிய படங்கள் வடிவேலுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார் வடிவேலு தற்போது பட வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன முதலாவதாக இயக்குனர் சுராஜ் உடன் கைக்கோர்த்த நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்று வருகிறது. மறுபக்கம் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடிகர் வடிவேலு கமிட்டாகி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பரான ஒரு கதை ஒன்றை வைத்துள்ளார்.

அந்த கதையின் படி பார்த்தால் நடிகர் வடிவேலு தான் செட் ஆகும் என்று கூறி தற்போது அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இதனால் நடிகர் வடிவேலுவின் சினிமா பயணம் மீண்டும் உச்சத்தை தொட ரெடியாக இருக்கிறது.

வடிவேலு,கவுதம் வாசுதேவ் மேனன் சொல்லும் கதையை முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து படம் உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் வடிவேலு நடித்தால் மட்டுமே படம் சிறப்பாக இருக்கும் எனக் கூறி கௌதம் வாசுதேவ் மேனன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.