anjali : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை அஞ்சலி. முதலில் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான கற்றது தமிழ் என்னும் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மத்தியிலும் கைத்தட்டல் வாங்கினார் மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகை என பலருக்கும் நிரூபித்து காட்டினார்
இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் அஞ்சலிக்கு குவிந்தது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தார் அந்த வகையில் மங்காத்தா அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் போன்ற படங்களை கொடுத்த அஞ்சலி திடீரென தெலுங்கு பக்கம் சென்றார் அங்கே இவருடைய படங்கள் சுமாராக ஓடியதோடு மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.
பிறகு தமிழ் சினிமா பக்கம் இவர் வந்தாலும் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்படி கிடைத்த வாய்ப்புகளில் நடித்தாலும் அந்த படங்கள் பெரிய அளவு ஓடவில்லை.. இதனால் நடிகை அஞ்சலி இனிவரும் படங்களில் தனது திறமையை காட்டினால் மட்டுமே நீடிக்க முடியும்..
என்பதை உணர்ந்து கொண்டு சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் அந்த வகையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஏழு கடல் ஏழுமலை என்னும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பூஜை கூட அண்மையில் போடப்பட்டது.
இந்த நிலையில் அஞ்சலி அங்காடி தெரு படத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசி உள்ளார் அங்காடித் தெரு படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் வசந்த பாலன் மீது அஞ்சலி கோபத்தில் இருந்து உள்ளார் காரணம் அங்காடி தெரு படம் ரியாலிட்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக அஞ்சலியை சாலையில் யாசகம்பெறுவர்களுடன் படுக்க சொல்லி இருக்கிறார் இதனால் அஞ்சலி ரொம்ப கோபட்டார்.
இருந்தாலும் படத்திற்காக எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு நடித்தாராம் பின் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காட்சி அப்பொழுது பலரையும் கண்கலுங்க வைத்ததாம் அந்த காட்சி அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது அந்த காட்சியை பார்த்த அஞ்சலிக்கு அந்த கோபம் அப்படியே மறைந்து விட்டதாம்..