கெமிஸ்ட்ரிகாக கதாநாயகியுடன் கார்த்திக்கை பழக சொன்ன பாரதிராஜா..! விபரிததில் முடிந்த பழக்க வழக்கம்..!

karthik-1
karthik-1

தமிழ் சினிமாவில் பல்வேறு கிராமத்து திரைப்படங்களை இயக்கி மாபெரும் இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இவ்வாறு இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்ததன் காரணமாக மக்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்துவிட்டார்.

அந்தவகையில் இவர்  16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியதும் மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களை பாரதிராஜாதான் முன்னிலைப்படுத்தி உள்ளார்.

அந்தவகையில் நடிகர் கார்த்திக்கை கூட இயக்குனர் பாரதிராஜா தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அந்த வகையில் இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடிகை ராதாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து விட்டது.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் காதல் திரைப்படமாக அமைந்தது தான் காரணமாக இவர்கள் இருவருக்கும் நெருக்கமான காதல் காட்சி இருந்தது மட்டுமில்லாமல் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகவில்லை இதனால் பாரதிராஜா நீங்கள் இருவரும் நெருங்கிப் பழகுங்கள் என  ஓபனாக கூறிவிட்டாராம்.

பின்னர் இவர்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்தது மட்டுமில்லாமல் இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.  இவ்வாறு பின்னர் இவர்களுடைய பழக்கவழக்கம் காதலாக மாறியது குறிப்பிடதக்கது.

ஆனால் சில கரணத்தின் மூலமாக இருவரும் தங்களுடைய காதலை துண்டித்துக் கொண்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் கூட கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ராதாவின் மகள் துளசி  உடன் இணைந்து கடல் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.