கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் மீராமிதுன் பஞ்சாயத்து தான் பெரிய பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருக்கிறது, இவர் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் விஜய்யை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்களது மனைவிகளையும் பச்சையாக பேசி அசிங்கப்படுத்தி விட்டார்.
அதற்கு பல சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அந்த வகையில் முதல் முறையாக பாரதிராஜா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.
என் இனிய தமிழ் மக்களே வணக்கம்.
சமீபகாலமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியை தருகிறது. புகழ் போதையில் ஒருவரை ஒருவர் இகழ்வதும் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும், கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்து கொள்வதை போலவும் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்வது போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளது என ஐயம் கொள்கிறேன்.
ஒருவரை ஒருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை, ஒருவரை ஒருவர் மரியாதை செய்து கலைப் பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்து விட்டோம் என்ன? என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது.
இதோ
நம் அன்புத் தம்பி விஜய் சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர், கவர்ச்சிகரமாக இந்தத் துறையில் தன் பெயர் கெட்டு விடாத அளவிற்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.?
திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை அழகுற கட்டமைத்து உள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் கண் முன் கண்ணாடி போல் நிற்கிறதே…
அழகிய ஓவியத்தின் மீது செருப்படி போல மீரமிதுன் என்கின்ற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதை கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.
சிறு பெண் பக்குவம் இல்லாமல் புகழ் வெளிச்சம் தேடி பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கௌரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தை பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள் துறை சார்ந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் இதுவரை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார் சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகிறார், அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.
மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது உழைத்து போராடி… எண்ணங்களை சீர் செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது, அடுத்தவரை தூற்றி பறித்து அதில் கோட்டை கட்டாதீர்கள் அம்மா, அது மண் கோட்டையாக தான் இருக்கும்.
வார்த்தைகள் பிறருக்கு வலியை தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கை வளம் ஏற்படுத்தும் பசியைப் போக்கும் அவசியமானவைகளாக அவை உதடு தாண்டி வெளிவரட்டும். நம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும் நடிகர் சங்கம் மட்டுமல்ல வேறு எந்த சங்கமும் எவ்விதமான எதிர் குரலும் இருப்பது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன் ஆனால் அசையவில்லை தேர்தல் நடைபெற சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காக கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிப்பட்ட கிடைக்கிறது?
யாரோ ஒருவரின் அவமானம் தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தை அழிந்துபோகும் அந்த சேரில் நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடி கண்டித்து இருக்க வேண்டாமா? சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளை கண்ணியத்திற்கு உட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்த கேட்டுக்கொள்கிறேன்.
முன்பெல்லாம் பத்திரிக்கை தர்மம் என்ற ஒன்றும் ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக் கோப்பில் இருந்தோம் ஆனால் இன்று அவை கல்லெறிய பட்டு கட்டற்று போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பை கேலி செய்யும் வார்த்தைகளை எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே.. அதனால் சமூகவலைதளங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை தயவுசெய்து கவனித்து நறக்கி விடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளையும் மிக கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதை கவனித்து வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர் ரசிகர்கள் தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் நமக்கு என்ன என நட்சத்திரங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது.
அவர்களை நல்வழிப்படுத்த ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டியது உங்களின் ஒவ்வொருவரின் கடமை கூட, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்க கூசும் கேவலமான வகைகளாக உள்ளன. ஒரு அறிக்கை விட்டால் அது அவர்களை மட்டு படுத்த வேண்டியது அவசியம் அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல் எறிகிறான், பாருங்கள் அது நம்ம வீட்டு அடுப்படியில் நாறுகிறது..
உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க என்றும் நல்ல கண்மணிகளை வளர்த்தல், உச்ச நட்சத்திரங்கள் என் போன்றோருக்கு உங்கள் மீது தூசி விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதைப்பார்த்த மீரா மிதுன் அப்புறம் ஏன் சார் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திலிருந்து என்னை நீக்கினார்கள் அதற்குக் காரணம் நீங்கள்தான எனக்கு தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.
Apuram yen sir , Enna " Namma veetu Pillai" padatula irundu neekuneenga, director @pandiraj_dir told me clearly it was ur pressure too that my scens should be not be used in the movie https://t.co/wRgfdElfY6
— Meera Mitun (@meera_mitun) August 10, 2020