சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்களை வித்தியாசமாக எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் இயக்குனர் பாலா இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் ஆனால் எந்த ஒரு படமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததே இல்லாமல் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.
அதனால் பாலா இயக்கம் ஒவ்வொரு படத்தையும் மக்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இப்பொழுது கூட நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் முதல் கட்ட படபிடிப்பு வெற்றி கரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படபிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது. வணங்கான் திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது காரணம் சூர்யா மற்றும் பாலா இதுவரை இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் வணங்கான் படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பாலா பேட்டி ஒன்றில் நடிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது சினிமா உலகில் அர்ப்பணிப்போடு நடிக்கும் நடிகர்கள் பெரிய அளவில் பேசப்படுகின்றனர். அந்த வகையில் கமல் போன்ற நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
அவர்கள் நடிப்பிற்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்குவார்கள், நடிப்பிற்காக ரொம்ப மெனக்கடக்கூடியவர்கள் இப்பொழுது பெரிய அளவில் நாம் பேசுகிறோம். அதுபோல 10 வருடங்கள் அல்ல 100 வருடங்கள் கழித்து பார்த்தாலும் ரசிகர்கள் இவர்களுடைய நடிப்பை பார்த்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் மேலும் அப்பொழுது இப்படி எல்லாம் நடித்திருக்கிறார்கள் என சொல்லி புகழ்ந்து பேசுவார்கள். மற்ற நடிகர்கள் 5 அல்லது 10 வருடத்திற்கு பிறகு காணாமல் போய் விடுவார்கள் என பாலா கூறினார்.