சூர்யாவின் காசை தண்ணி போல செலவு செய்யும் இயக்குனர் பாலா – அதுக்குன்னு இப்படியா.? புலம்பும் ரசிகர்கள்.

surya
surya

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்து தனது 41-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பதால் கன்னியாகுமரி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது ஆனால் கடைசி நேரத்தில் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என கூறப்பட்டது.

சூர்யாவின் 41 வது திரைப்படத்தை பாலா தற்போது விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கியதிலிருந்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே சண்டை என பல தகவல்கள் வெளிவந்தது ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியது.

அதாவது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என கூறப்பட்டது. மறுபக்கம் ஒரு உண்மையான தகவல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது அதாவது இந்த படத்திற்காக ஒரு வீட்டை 25 லட்சம் செலவு செய்து கட்ட சொல்லி உள்ளாராம் இயக்குனர் பாலா இந்த படத்திற்கு தானே சொல்கிறார் என பாலா இந்த படத்தில் முக்கிய காட்சிகள் அந்த வீட்டில் எடுப்பார் என நினைத்து சூரியா பிரமாண்ட பட்ஜெட்டில் அந்த வீட்டை கட்டி முடித்து உள்ளார்.

ஆனால் ஒரு காட்சி கூட அந்த வீட்டில் இன்னும் எடுக்கப்படவில்லையாம் இதுமட்டுமின்றி படத்தை சொன்ன தேதியில் முடிக்காமல் இழுத்துக் கொண்டே இருக்கிறாராம். இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது கோவாவில் நடக்க வேண்டிய ஷூட்டிங்கை பட்ஜெட் காரணமாக சூர்யா தற்போது பாண்டிச்சேரியில் எடுக்க கூறியிருக்கிறாராம். இதனால் சூர்யா மற்றும் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.