பல வருடம் கழித்து டுவிட்டரை அதிர வைத்த இயக்குனர் பாலா.! வைரலாகும் மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. பொதுவாக இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே நல்ல தரமான கதை உள்ள இளசுகளை கவரும் வகையில் தான் அமையும். அதோடு வசூல் ரீதியாக பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று விடும்.

அந்தவகையில் இயக்குனர்களுக்கும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாலா 1999ஆம் ஆண்டு சேது திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இத்திரைப்படத்தை இன்றளவும் மறக்க முடியாது. அதோடு இந்த படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்து இருந்தார்.

விக்ரமும் தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி பின்னி பெடல் எடுத்து இருந்தார். அந்த வகையில் பாலா மற்றும் விக்ரமின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்தது. எனவே இத்திரைப்படத்திற்கு அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதுதான் இயக்குனர் பாலாவின் முதல் திரைப்படமாக இருந்ததால் சிறப்பாக இருந்தது. எனவே அனைவரும் இவரை தலைமேல் தூக்கிவைத்து ஆடி வந்தார்கள்.

இதுமட்டுமல்லாமல் இவரை பாராட்டதவர்கள் என்று எவரும் கிடையாது.ஏனென்றால் இயக்கிய முதல் படமே தேசிய விருது வாங்குவது என்றால் சும்மாவா. அந்த வகையில் பாலா திரைப்படங்களில் நடித்து வந்த பல நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளது. எனவே இளம் நடிகர்,நடிகைகள் முதல் முன்னணி நடிகர், நடிகைகள் வரை அனைவரும் இயக்குனர் பாலா படத்தில் நடிப்பதற்கு காத்து வருகிறார்கள்.

அந்த வகையில் விக்ரமூக்கும் பாலாவின் மூலம் சினிமா வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது. இவரைத் தொடர்ந்து சூர்யாவும் நந்தா திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல பிரபலத்தை தந்தார் பாலா.இந்நிலையில் இயக்குனராக அறிமுகமாகி பாலா பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். ஆனால் இதுவரையிலும் எந்த நடிகர் நடிகையை பற்றியும் தனது சமூகவலைதளத்தில் கூறமாட்டார்.

ஆனால் தற்பொழுது அதிசயமாக முதன் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற புதிய முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் டுவிட்டர் பக்கத்தைத் தொடங்கி உள்ளார். அந்தவகையில் திருக்குறளை மையமாக வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று கூறி நீங்கள் செய்யும் அனைத்துக்கும் என்னுடைய ஆதரவுகள் என்று கூறியுள்ளார்.