தமிழ் சினிமா உலகில் இவரது படங்கள் மிகப்பெரிய அளவில் பேச வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வித்தியாசமான கதைகளை இயக்கி அசத்தி வருகிறார் இயக்குனர் பாலா. அந்த வகையில் முதலில் சேது படத்தை இயக்கி அறிமுகமானார்.
அதன் பின் பாலா இயக்கிய பரதேசி, பிதாமகன், அவன் இவன், தாரதப்பட்டை போன்ற படங்கள் வித்தியாசமாக இருந்தது மக்களுக்கும் பிடித்த படங்களாக மாறி இந்த படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்று அசத்தியது. இப்பொழுது இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவுடன் மீண்டும் கை கோர்த்து மீனவர் சம்பந்தப்பட்ட.
ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் முதல்கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2-வது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் டிவி பிரபல பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் அவன் இவன் படத்தில் கலந்து கொண்டார்.
அந்தப் படத்தில் நடித்த போது நடந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது பாலாவை மிகவும் தொந்தரவு செய்ததாகவும் என்னுடைய வசனம் என்ன என அடிக்கடி கேட்டதாகவும் இதில் கடுப்பாகி போன இயக்குனர் பாலா ஒரு பெரிய கல்லை எடுத்து வரச்சொல்லி விஜய் டிவி பிரபல பாடகர் ஆனந்த் வைத்தியநாதனை மாவட்ட வைத்துள்ளார்.
படத்தில் ஆனந்தின் கதாபாத்திரம் இதுதான் என சொல்லி அதிக அளவு அரிசியை எடுத்து வைத்துள்ளார். அவர் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் முழுவதும் இதே நிலைதான் ஆனந்த் வைத்தியநாதன் செய்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.