சூர்யா படத்தை இழுத்துக்கொண்டு போன பாலா – சரியான நேரம் பார்த்து அடித்த தயாரிப்பாளர்.! ஆட்டம் கண்ட படக்குழு.

bala-
bala-

உலகில் ஒரு சில இயக்குனர்கள் 6 மாதத்திற்கு ஒரு படத்தை எடுத்து அசத்துகின்றனர் ஆனால் ஒரு சிலரோ பல வருடங்கள் ஆனாலும் ஒரு படத்தை தரமான முறையில் கொடுத்து அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் விருதுகளை அல்ல வேண்டும் என நினைப்பது உண்டு அந்த வகையில் இயக்குனர் பாலா.

தமிழ் சினிமா உலகில் பல வித்தியாசமான படங்களை கொடுத்து பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் இவர் எடுக்கும் படங்கள் அனைத்துமே இதுவரை வெற்றியை ருசித்து உள்ளன. இப்பொழுதுகூட இயக்குனர் பாலா சூர்யாவுடன் கை கோர்த்து மீனவர் சம்பந்தமான ஒரு படத்தை எடுத்து வருகிறார் அந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இயக்குனர் பாலாவை பார்த்தாலே நடிக்கும் நடிகர்கள் தொடங்கி பலரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சற்று பயத்துடன் தான் இருப்பார்களாம் பாலா என்ன யோசிக்கிறார் என்பது யாருக்குமே தெரியாதாம் அவர் நினைக்கும்படி அந்த கதாபாத்திரம் வரவில்லை என்றால் அந்த கதாபாத்திரத்தை மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லிக் கொண்டிருப்பாராம் இதற்காக எத்தனை நாள் ஆனாலும் அதற்காக கவலைப்பட மாட்டாராம்.

அப்படி ஒரு சம்பவம் நடந்து உள்ளது. இயக்குனர் பாலா சேது திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நந்தா என்னும் படத்தை இயக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார் இந்த படத்தின் ஷூட்டிங்குக்கு நாட்கள் நீண்டுகொண்டே சென்றதாம். இதை கவனித்த தயாரிப்பாளர் பாலாவின் அனுமதியின்றி நந்தா படத்தின் ரிலீஸ் தேதியை தீபாவளிக்கு என விளம்பரப் பத்திரிகையில் தகவல் கொடுத்து விட்டாராம்.

அதன் பிறகு தெரிந்து கொண்ட பாலா தீபாவளிக்கு முன்னதாக விரைவாக படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிறகு படத்தை விரைவில் முடித்து நவம்பர் 14 2002 ஆம் ஆண்டு அந்த படத்தை திரைக்கு கொண்டு வந்தார் இந்த தகவலை அண்மையில் பிரபல பத்திரிக்கையாளர் கூறினார்.