சினிமா உலகில் நடக்கின்ற விஷயங்களை நேர்படப் பேசும் பிரபலங்கள் வெகு குறைவு தான் அதை நாம் உணர்ந்து இருக்கிறோம் ஆனால் ஒரு சில பிரபலங்களும் நடக்கின்ற விஷயங்களை சமூக வலை தளத்தின் வாயிலாகவும், மீடியா முன்பும் கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராகவும், பத்திரிகையாளராகவும் பிரபலமானவர் பயில்வான் ரெங்கநாதன்.
முதலில் பத்திரிகையாளராக இருந்து பின் சினிமாக்களில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் ரெங்கநாதன் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக பெருமளவு படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் தனது ஆரம்ப தொழிலான பத்திரிக்கையாளர் வேலையை கையில் எடுத்து உள்ளார்.
இது போதாத குறைக்கு அப்போது சமூக வலைதளப் பக்கம் மற்றும் yoytube சேனல்களுக்கு தனது பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படி இவர் கொடுக்கும் போது நடிகர், நடிகைகளின் பர்சனல் வாழ்க்கை குறித்தும் இவர் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படியே பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையை நடக்கும் சினிமா நடக்கும் நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களின் பிரஸ்மீட் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேள்விகளை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் அண்மையில் பிசாசு படத்தின் பிரஸ் மீட் ஒன்று வைக்கப்பட்டது அதில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார் அப்பொழுது இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலாவை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார்.
பிசாசு என டைட்டில் வைத்து உள்ளீர்கள் அதனால் தான் கருப்பு நிற உடையில் வந்து இருக்கிறீர்களா என கேட்டார் அதற்கு பதிலளித்த பாலா பிசாசு என்றால் கருப்பு நிற உடை அணிந்திருக்க வேண்டிய அவசியமில்லை பிங்க் நிற உடை கூட அணிந்திருக்கலாம் என்று அவர் கூறினார். அப்போது ஸ்டேடியம் கைதட்டல் மற்றும் சிரிப்பில் மாறியது அந்த நிகழ்வு நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.