திரையுலகில் நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் இயக்குனர்கள் பலரும் சிறப்பம்சம் உள்ள படங்களை எடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் இயக்குனர்களும் காசை பார்க்க மிகப்பெரிய படங்களை இயக்கினாலும் அந்த திரைப்படங்கள் பழைய படத்தின் சாயலில் வருவதால் ஒரு சில புகார்கள் வருகிறன.
ஆனால் இதற்கு இடம்கொடுக்காமல் தற்போது வரையிலும் பல்வேறு திரைப்படங்களை இயக்கி பல விருதுகளை தன்வசப்படுத்தி தற்போது திரையுலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதில் ஒன்றாக பார்க்கப்படுவது தான் சேது படம்.
இந்த நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரெங்கநாதன் இயக்குனர் பாலா குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசினார் அப்போது சேது படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது : விக்ரம் சேது படத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்து திரைப்படங்களில் தோல்வி கொடுத்ததால் தயாரிப்பாளர் இயக்குனர் பாலாவிடம் அந்த ஹீரோவை கமிட் செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு விக்ரம்தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். இருப்பினும் பாலாவை நம்பி தயாரிப்பாளர் விக்ரமை களத்தில் இறக்கினார். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல ரிச்சை எட்டியது.
இருப்பினும் போட்ட காசை விட லாபத்தை பார்க்க முடியாததால் தயாரிப்பாளர் வாடகை வீட்டிற்கு செல்லும் நிலைக்கு தள்ளபட்டார். ஆனால் தயாரிப்பாளர் தவிர மற்ற இடையில் இருந்த ஆட்கள் ஓரளவு லாபத்தை பார்த்தார்களாம் இவ்வாறு வரும் ரெங்கநாதன் கூறியிருந்தார்.